Monday, October 31, 2016

உலக மீனவர் தினம்

தலைமுறை,தலைமுறையாக பாரம்பரியமாக கடற்கரையில்  வாழ்ந்து  கொண்டு கடலில் மீன்பிடித்தலும் வாழ்க்கை  நடத்தும் மீனவ சமுதாயத்தினரை கடலில் இருந்தும்  கடற்கரையில் இருந்தும் அப்புறப்படுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகள் ,பன்னாட்டு நிறுவனங்கள் கார்பரேட் கம்பெனிகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்         கடலில் வெளிநாட்டு கப்பல்கள்  மூலம்  மீன்பிடித்தலுக்கு அனுமதி  கடற்கரையில்  அனல்  மின்நிலையம்  நாசகார கெமிக்கல் தொழிற்சாலைகள் உல்லாச விடுதிகள் ஆகியவைகள்  மூலம் மீனவர்ககளை அப்புறப்படுத்திதிரை கடலையும் கடற்கரையையும் அபகரிக்கும்  சதி செயலை முறியடிக்க வேண்டியது நம்முடைய கடமையாகும்                                   உலகம் முழுவதும் நடைபெறும்  இந்த  கடல்  அபகரிப்பை தடுத்து  நிறுத்த  சர்வதேச அளவில் போராட்டங்களில் ஈடுபட உலக மீனவர் பேரவை அழைப்பு  விடுத்துள்ளது                                                   உலகம்  முழுவதும்  நடைபெறும் போராட்டங்களையொட்டி  இந்தியாவிலும் தேசிய மீனவர் பேரவை சார்பில் டெல்லியில் மாபெரும் மீனவர் பேரணி  நடத்த முடிவு செய்யப்பட்டு்ள்ளது                                            உலக மீன்வள தினமான 21-11-2016 திங்கட்கிழமையன்று  டெல்லியில்  காலை 10.00 மணிக்கு ஜந்தர் மந்தரில் பேரணி நடைபெறும்.