Tuesday, December 29, 2009

சிதம்பரம் தேர்த்திருவிழா: அருள்மிகு பருவதராஜகுல செல்வ வினாயகர் ஆலய தேர் தரிசன திருவிழா ஸ்தல வரலாறு

பாண்டிய நாட்டில் கீழைக் கரையில் கடலோரத்தில் பாக்கம் என்ற ஊர் உள்ளது.அந்த ஊரின் அரசன் செம்படவத் தலைவன் பர்வதராஜன். அவனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.அரசன் ஒரு நாள் வேட்டைக்கு சென்று திரும்பி வந்து கொண்டிருக்கும் போது புன்னை மர நிழலில் ஒரு பெண் குழந்தை கிடப்பதை பார்த்தான்.தான் வணங்கும் சிவபெருமான் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லா குறை அறிந்து குழந்தையைக் கொடுத்துள்ளார் என்று அரண்மணைக்கு எடுத்து சென்று வளர்த்து வந்தான் அக்குழந்தைக்கு சிவகாமசுந்தரி என்று பெயரிட்டான்.ஒரு நாள் நந்தி தேவர் சுறா மீன் வடிவில் கடலில் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார் .பர்வதராஜகுலத்தவர் எவ்வளவு முயற்சி செய்தும் சுறா மீனைப் பிடிக்க முடியவில்லை.பர்வதராஜன் என்ன செய்வது என யோசித்து ,இந்த சுறா மீனை யார் அடக்கிப் பிடிக்கிறார்களோ அவருக்கு எனது மகளை திருமணம் செய்து வைக்கிறேன் என ஊர் அறிய அறிவித்தான்.சிவபெருமானே சுறா மீனை அடக்கும் வீரனாக தோன்றி சுறா மீனை அடக்கினார்.சுறா மீனை அடக்கிய வீரனுக்கு தனது மகளை மணம் செய்து வைத்தார் பர்வதராஜன் பர்வதராஜகுலத்தில் நமது குலக்கொடி பிறந்த பெருமையை கொடுத்து அருளிய சிவனார்க்கும்,சிவகாமிசுந்தரிக்கும் சீர் வரிசைகள் செய்து மகிழும் நாள் தான் சிதம்பரம் தேர் திருவிழா




தேர் திருவிழா அன்று நமது ச்முதாய மக்கள் அனைவரும் வடக்கு மெயின் ரோட்டில் அமைந்துள்ள நமது ச்முதாய கோவிலான அருள்மிகு பருவதராஜகுல செல்வ விநாயகர் ஆலயத்திலிருந்து வரிசைகள் எடுத்து சென்று மரியாதை செய்ய ஒன்று கூடுதல் நமது கடமையாகும்

3 comments:

பாரம்பரிய மீனவன் said...

கேவலமாக இருக்கிறது... ஒரு மீனவனுக்கு மகளாக பார்வதி பிறக்கவில்லை, மீனவானால் தத்தெடுக்க பட்டாள். அவளை சிவன் மணந்தார். ஒரு மீனவ குடும்பத்தில் பார்வதி பிறந்தாள் என்று சொல்வதைக் கூட இழிவாக நினைக்கும் புராண கதையை நீங்களெல்லாம் தூக்கிவைத்து பேசுவது வியப்பாக இருக்கிறது.....

சுரேஷ் said...

அப்படி மீனவனுக்கோ மற்ற மனிதருக்கு மகனாகவோ மகளாவகோ பிறந்தால் அது கடவுள் இல்லை. கடவுள் பிறப்பு இறப்புக்கு அப்பால் பட்டவர்கள்..

imanolqadir said...

Casino City: 2021 Review & Bonus Code for Indian Players
It 세종특별자치 출장마사지 has 김해 출장마사지 a casino card, blackjack, poker, video poker, table 여수 출장안마 games, bingo, 순천 출장마사지 sportsbook, 울산광역 출장마사지 a fitness center, and a bar. Casino City has a