Tuesday, December 29, 2009

மாசிமகம்

The inscription of Naralokavira to which we have referred in Chapter Four mentions that this Chief had built a road leading to, and a mantapa on the sea-shore (near killai). It points to the Masi festival when the Lord (as Somaskanda) was taken in procession from Chidambaram to Killai nearly three miles away) on the sea-coast. Rajendra I's inscription too refers to the Masi festival. Perhaps it was abandoned later for reasons of security while in transit.

சிதம்பரம் தேர்த்திருவிழா: அருள்மிகு பருவதராஜகுல செல்வ வினாயகர் ஆலய தேர் தரிசன திருவிழா ஸ்தல வரலாறு

பாண்டிய நாட்டில் கீழைக் கரையில் கடலோரத்தில் பாக்கம் என்ற ஊர் உள்ளது.அந்த ஊரின் அரசன் செம்படவத் தலைவன் பர்வதராஜன். அவனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.அரசன் ஒரு நாள் வேட்டைக்கு சென்று திரும்பி வந்து கொண்டிருக்கும் போது புன்னை மர நிழலில் ஒரு பெண் குழந்தை கிடப்பதை பார்த்தான்.தான் வணங்கும் சிவபெருமான் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லா குறை அறிந்து குழந்தையைக் கொடுத்துள்ளார் என்று அரண்மணைக்கு எடுத்து சென்று வளர்த்து வந்தான் அக்குழந்தைக்கு சிவகாமசுந்தரி என்று பெயரிட்டான்.ஒரு நாள் நந்தி தேவர் சுறா மீன் வடிவில் கடலில் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார் .பர்வதராஜகுலத்தவர் எவ்வளவு முயற்சி செய்தும் சுறா மீனைப் பிடிக்க முடியவில்லை.பர்வதராஜன் என்ன செய்வது என யோசித்து ,இந்த சுறா மீனை யார் அடக்கிப் பிடிக்கிறார்களோ அவருக்கு எனது மகளை திருமணம் செய்து வைக்கிறேன் என ஊர் அறிய அறிவித்தான்.சிவபெருமானே சுறா மீனை அடக்கும் வீரனாக தோன்றி சுறா மீனை அடக்கினார்.சுறா மீனை அடக்கிய வீரனுக்கு தனது மகளை மணம் செய்து வைத்தார் பர்வதராஜன் பர்வதராஜகுலத்தில் நமது குலக்கொடி பிறந்த பெருமையை கொடுத்து அருளிய சிவனார்க்கும்,சிவகாமிசுந்தரிக்கும் சீர் வரிசைகள் செய்து மகிழும் நாள் தான் சிதம்பரம் தேர் திருவிழா




தேர் திருவிழா அன்று நமது ச்முதாய மக்கள் அனைவரும் வடக்கு மெயின் ரோட்டில் அமைந்துள்ள நமது ச்முதாய கோவிலான அருள்மிகு பருவதராஜகுல செல்வ விநாயகர் ஆலயத்திலிருந்து வரிசைகள் எடுத்து சென்று மரியாதை செய்ய ஒன்று கூடுதல் நமது கடமையாகும்