Monday, March 29, 2021
கன்னியாகுமரி மீனவ மக்களுடன் கலந்துரையாடல்
மக்களுடன் புதிய தலைமுறை: கன்னியாகுமரி மீனவ மக்களுடன் கலந்துரையாடல்... | 27/03/2021 https://www.youtube.com/watch?v=Br3olhS5N3s
Friday, March 26, 2021
Thursday, March 25, 2021
சாகர்மாலா திட்டம் என்பதற்கு கடல் மாலை திட்டம் (Sagar Mala project) என்று பொருள்
காடுகளில் இருந்து எப்படி பழங்குடிகள் வெளியேற்றப்படுகின்றார்களோ,
விவசாய நிலங்களிலிருந்து எப்படி விவசாயிகள் வெளியேற்றப்படுகிறார்களோ
அதுபோல மீனவர்களை கடலிலிருந்து வெளியேற்றும் வழிமுறையே இந்தத் திட்டத்தின் அடிப்படை கொள்கை.
- மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
- பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இணையம் துறைமுகத் திட்ட எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்,
- " சாகர் மாலா திட்டம், மக்களின் வாழ்வாதாரத்துக்குப் பாதுகாப்பு இல்லாத திட்டம். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிக்கப்படும்.
- இந்தியா முழுவதும் உள்ள 13 துறைமுகங்களை புதுப்பிக்கப் போகிறார்கள். அதைச் செய்து கொள்ளட்டும். அதி விட்டுவிட்டு புதிதாக தமிழ்நாட்டில் இரண்டு துறைமுகங்களை அமைக்கப் போகிறார்கள். அதில் இணையம் துறைமுகம் திட்டமும் ஒன்று.
- இணையம் துறைமுகத்தால் பல ஆயிரக்கணக்கான நிலங்கள் கையகப்படுத்தப் படும். கடல் ஆக்கிரமிக்கப்படும், மீனவர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படும்.
- மேலும், இணையம் பகுதியில்தான் தமிழக அரசு ஆமை தனது இனப்பெருக்க காலத்தில் அதிக முட்டையிடும் இடமாகவும் விளங்குகிறது. அந்த இடத்தில்தான் தற்போது இணையம் துறைமுகம் அமையப் போகிறது.
- இதுதவிர, பக்கத்தில் இருக்கும் அதிகமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு தொழிற்மேம்பாட்டு பூங்காக்கள் அமைக்கப்படும். இரயில் நிலையங்கள் அதற்குப் பாதைகள் என அனைத்தையும் அங்கு நிறுவினால் இணையம் பகுதி போதாது.
- இதேபோல கடற்கரை முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றால் அது நினைத்ததைச் செய்யும். ஆனால் விவசாயம், மீனவ சமுதாயம் எனப் பலவும் வீழ்ச்சியைச் சந்திக்கும்"
- தமிழத்திலுள்ள 7 கடற்கரை மாவட்டங்களில் மீன்பிடி தொழிலை ஆதாரமாகக் கொண்டுள்ள மக்கள் இதனால் பாதிக்கப்படுவர்.
- 7 கடற்கரை மாவட்டங்களில் உள்ள மீனவர்களில் 18 விழுக்காடு மக்கள் கடற்கரையை வாழ்விடமாக கொண்டுள்ளனர். அவர்களின் வாழ்விடங்கள் பறிக்கப்படும், இடைவிடாத போக்குவரத்து மாசினால் மீன்வளம் பாதிக்கப்படும்
- ஏற்றுமதி இறக்குமதி. என்ன ஏற்றுமதி?
- இங்குள்ள நிலக்கரி, ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஈத்தேன், ஆற்றுமணல், மலைமணல் போன்ற வளங்களைக் கொள்ளையடித்து ஏற்றுமதி செய்வது.
- வெங்காயம் பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை விளைவிக்க போதுமான வளம், நிலம் இருந்தும் அதை விளைவிக்க முடியாமல் இறக்குமதி செய்வது.
- by ஜபஸ்தியன் ஷெலடன்
சாகர் மாலா திட்டம் பற்றிய சில கருத்துக்கள்
சாகர் மாலா திட்டம் திட்டத்தால் நீல பொருளாதாரம் எனப்படும் கடல் வளமே மக்களிடமிருந்து பறிபோகும் அபாயம்.
பாதிக்கப்படப் போவது யார் யார்?
1. கடலில் மீன் பிடிக்கும் 25 கோடி மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரங்கள் இழப்பார்கள்.
2. 3600 மீனவ கிராமங்கள் தங்களின் கடற்கரை மண்ணிலிருந்து அந்நியப்படுத்தப்படும்.
3. 12 பெரிய மற்றும் 165 சிறிய துறைமுகங்கள் மற்றும் மீன்பிடி துறைமுகங்களும் இனி அந்நிய மற்றும் நாட்டு தனியார் முதலாளிகளின் வசமாகும்.சாகர் மாலா திட்டத்தில் அமையப் போகும், அழியப்போகும் கடல் பொருளாதார மண்டலங்கள்:
4. 4120 சதுர கிலோ மீட்டர் மாங்குரோவ் காடுகள் அழிக்கப்படும்.
5. இந்தியாவின் கடற்பரப்பில் உள்ள 1208 தீவுகளும் இனி அந்நிய கார்பொரேட் நிறுவனங்களின் தீவுகளாக மாற்றப்படும். இந்தியர்கள் நுழைய தடை விதிக்கப்பட்ட பகுதியாக மாறப்போவது வெகு சீக்கிரம்.
6. சாகர் மாலா என்ற திட்டத்தின் மூலம் அந்நிய தனியார் நிறுவனங்கள் நமது நாட்டின் கடல் வளங்களை கொள்ளை அடிப்பதற்கு நமது அரசாங்கம் ஒதுக்கியுள்ள மக்களின் வரிப்பணம் தொகை 8 இலட்சம் கோடி. அதாவது ஒவ்வொரு இந்தியக்குடிமகனும் வரிப்பணமாக கொடுத்துள்ள தொகை 6,400 ரூபாய்.
7. சீன மீன்பிடி வலையையே அனுமதிக்க கூடாது என்று போராட்டம் நடத்தும் மீனவர்களின் வாழ்வாதாரமே பறிபோகும் நிலை. இனி மீன் பிடிக்க கடலுக்குள்ளேயே செல்ல முடியாத நிலை ஏற்படப் போகுது.
II. சாகர்மாலா திட்டத்தின் ஒரு பகுதியாக
எதிர்ப்புக்குரல் வலுக்கும் தமிழ்நாடு
படிப்படியாக இராணுவ மயமாக்கப்பட்டு வருகிறது.
1. கூடங்குளத்தில் இராணுவ அணு உலை:
தமிழக கடலோர மக்களின் வாழ்வாதாரமாகிய மீன்பிடி தொழிலை அழித்து,
இதுவரை இரண்டு ஆண்டுகளாக மின்சாரமே உற்பத்தியாகாத அணு உலையில்,
மின்சார உற்பத்தி என்ற பெயரில் இராணுவ பயன்பாட்டிற்காக,
இரசியாவில் நிராகரிக்கப்பட்ட அணு உலை தொழில்நுட்பத்தை வலியத்திணிக்கும்
வல்லாதிக்க இந்திய இராணுவத்தை என்ன சொல்ல?
அணு உலை வெளியேற்றும் அணுக்கழிவு மற்றும் கொதி நீரால் அப்பகுதி மீன் வளமே அழியும் நிலை.
மீனவர்களும் மீன் பிடிக்க செல்ல முடியாத மண்டலமாக தடை செய்யப்பட்ட பகுதிகள்.
தன் சொந்த நாட்டு மக்களை அகதியாக்கி, அநியாயத்தை தடுக்க போராடும் நிராயுதபாணி மக்களை இராணுவம் கொண்டே ஒடுக்குமுறை செய்யும் இக்கொடுமை அரச பயங்கரவாதம் இல்லையா?
மக்களை அச்சுறுத்த இராணுவ விமானங்களும் கூட பயன்படுத்தப்பட்டன.
2. தஞ்சாவூரில் இராணுவ விமான தளம்
தஞ்சாவூர் இராணுவ தளத்திற்காக நில ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதற்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கூட வழங்கப்படவில்லை. அவர்கள் வாழ்ந்த பகுதியில் நுழையக்கூட தடை. இந்தக் கொடுமையை எங்க சொல்ல? காண்க:
தஞ்சாவூர் விமான படைத்தளம்:
3. அரக்கோணத்தில் விமான, கப்பல் இராணுவ தளங்கள்: INS ராஜாளி (Rajali):
அரக்கோணம் கடல் விமான இராணுவ தளத்தில் அமெரிக்க விமானங்கள் எதற்கு? காண்க:
4. கோவை சூலூர் விமான தளம்:
5. தாம்பரம் விமான தளம்
6. இராமநாதபுரத்திற்கு அருகில் உச்சிப்புளியில் கடற்படை விமானத்தளம் INS பருந்து. காண்க:
உச்சிப்புளி விமானப்படை ஓடுபாதை
1982 ல் தமிழ் ஈழத்தை கண்காணிக்க தொடங்கப்பட்ட இந்தத் தளம் பின்னர் தென் இந்தியக் கடல்கள் முழுவதும் கண்காணிக்க விரிவு படுத்தப்பட்டுள்ளது. காண்க: மற்றும் காண்க:
7. தனுஷ்கோடி:
இவ்வளவு ஆண்டுகள் கேட்பாரற்று கிடந்த தனுஷ்கோடி மீது 2017 ல் இந்திய இராணுவத்திற்கு திடீர் அக்கறை எதற்கு?
20 கி.மீ. நீண்ட, அகல சாலை இராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி வரை போடப்பட்டுள்ளது
சாகர் மாலா இராணுவ நோக்கத்திற்காகவே.
8. ஊட்டி வெல்லிங்டனில் ஏற்கனவே இராணுவ பயிற்சி கல்லூரி செயல்படுவது நாம் அறிந்ததே.
நேரடி இராணுவ தளங்கள் தவிர
9. அயல் நாட்டு இராணுவம் போல்
தன் நாட்டு மக்களுக்கெதிராக
தூண்டிவிடப்பட்ட ரௌடிகளாக,
ஆளும் அரசாங்கத்தின் அடியாட்களாக
மாறிப்போன தமிழக காவல் துறையின் அட்டூழியங்களை புதிதாக சொல்லத் தேவையில்லை.
உலகமே வியந்து போற்றிய மிக அமைதியான,
தமிழக இளைஞர்களின் 12 நாள் மெரினா போராட்டத்தை
வன்முறைக்களமாக மாற்ற
அரசியல்வாதிகளால் தூண்டப்பட்ட காவல்துறை எடுபிடிகள்.
திருப்பூர் உதவி துணை காவல் ஆய்வாளர் பாண்டியராஜன் ரௌடியாகவே மாறி ஒரு பெண்ணிடம் தன் வீரத்தைக் காட்டி டாஸ்மாக்குக்கு எதிராக போராடிய பெண்ணை ஊனமாக்கிய கொடுமை.
10. மக்களின் அடிப்படை வாழ்வாதாரமான விவசாயத்தின் மீது
அடக்குமுறை அரசின் பொருளாதார இராணுவ தாக்குதல்
1. நெடுவாசலில்
2. திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில்
கெயில் நிறுவனத்திற்காக (GAIL) விவசாய நிலங்கள் அழிப்பு
3. இந்தியா முழுவதும் இயற்கை வளங்களை கொள்ளையடிக்க
தனியார் நிறுவனங்களை கொண்டு வரும்
மத்திய, மாநில (கமிஷன் ஏஜென்ட்) தரகு அரசாங்கங்கள்.
11. மக்களைப் பாதுகாக்காமல்
மக்களுக்கு பேரழிவு தரும் கொடூர அட்டூழியங்களைப் பாதுகாக்க
என மாற்றப்பட்ட
மக்களின் வரிப்பணத்தில் வாழும் அதிகார வர்க்கம்.
இராணுவம், காவல்துறை யாரை பாதுகாக்க?
1. அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை பாதுகாக்க
2. மக்களுக்கு பேரழிவு தரும் டாஸ்மாக் கை பாதுகாக்க
12. சென்னை கடற்கரையில் அந்நிய நிறுவனங்கள் கொட்டிய எண்ணையை அகற்ற மட்டுமல்ல, யார் கொட்டியது என்று கண்டுபிடிக்க முடியாமல், அவர்களுக்கு தண்டனை தராமல் தப்பிக்க விட்ட நமது வெட்கங்கெட்ட அரசுகள். காண்க:
கடலில் கொட்டப்பட்ட எண்ணையை
பி.ஜே.பி. அரசு டிஜிட்டல் முறையில் அள்ளியபோது எடுத்த அரிய புகைப்படம்.
13. தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடந்த போது இலங்கை அதை செய்யவில்லை என்றது.
பின்னணியில் அப்போது உருவான தமிழக மக்களின் நெடுவாசல், கதிராமங்கலத்துக்கான ஹைட்ரொ கார்பன் எதிர்ப்பு உணர்வை திசை திருப்ப பி.ஜே.பி. அரசே தமிழக மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூடு.
14. இந்திய கடலோர காவல்படை தமிழக மீனவர்களை சுட்டு காயப்படுத்தியதோடு,
இந்தியில் பேசச்சொல்லி அவமானப்படுத்திய அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்திய அரசின் இராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன்,
-- பாலகுமார்
ஏன் மீனவர்களைபழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்
21 ( 2 ) உட்கூறின் கீழ் விடுக்கப்படும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பட்டியல் பழங்குடியின மரபினருக்கான பட்டியலிலிருந்து ஒரு குடியினரை அல்லது அந்த குடியின் பிரிவைப் புதியதாக சேர்ப்பதற்கும் , நீக்குவதற்கும் சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உண்டு , அவ்வாறு சொல்லப்பட்ட முறையிலின்றி அவற்றில் கூறியபடி வெளியிட்டுள்ள அறிவிப்பில் எத்தகைய மாற்றத்தையும் செய்யக்கூடிய மற்றோர் அறிவிப்பை வெளியிடுதல் கூடாது . மேலும் பிரிவு 366 ( 24 ) சொற்பொருள் விளக்கத்தின்படி பட்டியலின பழங்குடி மரபினர் என்பது , இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 342 ன் கீழ் அத்தகைய மரபினர் அல்லது குழுவினர் என்று கருதப்படும் பழங்குடியினரைக் குறிப்பதாகும் . தேசிய பட்டியிலின மற்றும் பழங்குடியினர் அமைச்சகத் திலிருந்து பழங்குடி மக்களுக்கான தனி அமைச்சரகம் 1999 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமைக்கப்பட்டது . தேசிய பழங்குடியினர் ஆணையம் , 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி அமைக்கப்பட்டது . ஒரு சமூகம் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டால் , மத்திய , மாநில அரசுகள் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு , உயர் கல்வி நிறுவனங் பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீடு சட்டமன்ற , பாராளுமன்ற தொகுதிகளில் ஒதுக்கீடு , கல்விக் கட்டணத்தில் சலுகை , சிறப்பு பயிற்சி , வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களில் படிக்க நிதி உதவி ஆகியவைகளைப் பெறமுடியும் . மேலும் கூட்டுறவு வங்கி , கூட்டுறவு விற்பனையகம் , சமூக வளங்களை சமூக கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் உரிமை , சிறப்பு ஆட்சியமைப்பு என்று இன்னும் பல சலுகைகளும் உரிமைகளும் கிடைக்கும்
தமிழ்நாடு பருவதராஜகுல மீனவர் சங்கம் (பதிவு எண் S-1of 1931 -32)
-
பரதவர்- தென் திசை மன்னர் பரதவர்,பரவர்,பரதர் அல்லது பரதகுல ஷத்ரியர் என்போர்,தமிழகத்தின் மிக பழமையான சாதியினர்.பாண்டிய வம்சத்தைத் தோற்றுவித்தவ...
-
பாண்டிய நாட்டில் கீழைக் கரையில் கடலோரத்தில் பாக்கம் என்ற ஊர் உள்ளது.அந்த ஊரின் அரசன் செம்படவத் தலைவன் பர்வதராஜன். அவனுக்கு குழந்தை பாக்கியம்...
-
21 ( 2 ) உட்கூறின் கீழ் விடுக்கப்படும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பட்டியல் பழங்குடியின மரபினருக்கான பட்டியலிலிருந்து ஒரு குடியினரை அல்லது ...