Thursday, March 25, 2021

சாகர்மாலா திட்டம் என்பதற்கு கடல் மாலை திட்டம் (Sagar Mala project) என்று பொருள்

காடுகளில் இருந்து எப்படி பழங்குடிகள் வெளியேற்றப்படுகின்றார்களோ,

விவசாய நிலங்களிலிருந்து எப்படி விவசாயிகள் வெளியேற்றப்படுகிறார்களோ

அதுபோல மீனவர்களை கடலிலிருந்து வெளியேற்றும் வழிமுறையே இந்தத் திட்டத்தின் அடிப்படை கொள்கை.

  • மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
  • பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இணையம் துறைமுகத் திட்ட எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்,
  • " சாகர் மாலா திட்டம், மக்களின் வாழ்வாதாரத்துக்குப் பாதுகாப்பு இல்லாத திட்டம். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிக்கப்படும்.
  • இந்தியா முழுவதும் உள்ள 13 துறைமுகங்களை புதுப்பிக்கப் போகிறார்கள். அதைச் செய்து கொள்ளட்டும். அதி விட்டுவிட்டு புதிதாக தமிழ்நாட்டில் இரண்டு துறைமுகங்களை அமைக்கப் போகிறார்கள். அதில் இணையம் துறைமுகம் திட்டமும் ஒன்று.
  • இணையம் துறைமுகத்தால் பல ஆயிரக்கணக்கான நிலங்கள் கையகப்படுத்தப் படும். கடல் ஆக்கிரமிக்கப்படும், மீனவர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படும்.
  • மேலும், இணையம் பகுதியில்தான் தமிழக அரசு ஆமை தனது இனப்பெருக்க காலத்தில் அதிக முட்டையிடும் இடமாகவும் விளங்குகிறது. அந்த இடத்தில்தான் தற்போது இணையம் துறைமுகம் அமையப் போகிறது.
  • இதுதவிர, பக்கத்தில் இருக்கும் அதிகமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு தொழிற்மேம்பாட்டு பூங்காக்கள் அமைக்கப்படும். இரயில் நிலையங்கள் அதற்குப் பாதைகள் என அனைத்தையும் அங்கு நிறுவினால் இணையம் பகுதி போதாது.
  • இதேபோல கடற்கரை முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றால் அது நினைத்ததைச் செய்யும். ஆனால் விவசாயம், மீனவ சமுதாயம் எனப் பலவும் வீழ்ச்சியைச் சந்திக்கும்"
  • தமிழத்திலுள்ள 7 கடற்கரை மாவட்டங்களில் மீன்பிடி தொழிலை ஆதாரமாகக் கொண்டுள்ள மக்கள் இதனால் பாதிக்கப்படுவர்.
  • 7 கடற்கரை மாவட்டங்களில் உள்ள மீனவர்களில் 18 விழுக்காடு மக்கள் கடற்கரையை வாழ்விடமாக கொண்டுள்ளனர். அவர்களின் வாழ்விடங்கள் பறிக்கப்படும், இடைவிடாத போக்குவரத்து மாசினால் மீன்வளம் பாதிக்கப்படும்
  • ஏற்றுமதி இறக்குமதி. என்ன ஏற்றுமதி?
  • இங்குள்ள நிலக்கரி, ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஈத்தேன், ஆற்றுமணல், மலைமணல் போன்ற வளங்களைக் கொள்ளையடித்து ஏற்றுமதி செய்வது.
  • வெங்காயம் பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை விளைவிக்க போதுமான வளம், நிலம் இருந்தும் அதை விளைவிக்க முடியாமல் இறக்குமதி செய்வது.
  • by ஜபஸ்தியன் ஷெலடன் 

No comments: